#BREAKING: கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம் ..!

கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதுவரை மத்திய அரசால் 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது அதிகரித்துவரும் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் மருந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025