தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் – முதல்வர்!
தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இது குறித்து தற்பொழுது காணொலி காட்சி மூலமாக பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஒரு வாரம் தமிழகத்தில் போடப்பட்டுள்ள முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியால் வாடுபவர்களுக்கு பசி போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு வழங்க கூடிய பணியை மேற்கொள்ள வேண்டுமெனவும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இது குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் #COVID19 எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன்.
அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்.
மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்! pic.twitter.com/byUC8nsuOm
— M.K.Stalin (@mkstalin) May 29, 2021