திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில்,தமிழ் இனத்திற்கு சோதனை காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். திமுக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலைவர் கருணாநிதி, தமிழ் பெயரை தான் வைத்துள்ளார்.
ஸ்டாலின் என்று பெயர் வைத்த காரணத்தால் நான் பல சங்கடங்களை அனுபவித்து உள்ளேன்.ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டிற்கு சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் என் பெயரை கேட்டதும் என்னை உற்று பார்த்தனர்.
சர்ச் பார்க் பள்ளியில் என்னை சேர்க்க வேண்டும் என்று முயற்சி செய்த போது, எனது சகோதரர்களை மட்டும் பள்ளியில் அனுமதித்தனர் ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. அப்போது கலைஞர் கூறினார், பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன், பெயரை மாற்ற மாட்டேன் என்றார்.
திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்கிறார், நான் வெளிநாட்டிற்கு சென்றேன் முதலீடுகளை ஈர்க்க அல்ல, ஜப்பான் நாட்டிற்கு மெட்ரோ ரயில் திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றிற்காக சென்றோம்.
ஆனால் இவர்கள் இருக்கும் ஓராண்டில் அனைத்து வெளிநாடுகளுக்கும் சென்று விட வேண்டும் என்கிற நோக்கில் சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி மோடி வெளிநாடு செல்வது போன்று தாங்களும் செல்ல வேண்டும் என்று அதிமுகவினர் செல்கின்றனர்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…