தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

Default Image

தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார். தேர்தல் தொடர்பாக விசிக இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றும் தொடர்ந்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம் எனவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் குறித்த முடிவுக்கும் மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று திமுகவுடன் நடைபெற்றது. இன்று இரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அந்த ஒரு கருத்தின் அடிப்படையில் தான் நாம் இன்னும் பங்கீடு குறித்து பேசி வருகிறோம் என பேசியுள்ளார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் 15 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கு என்ற அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதில் ஒன்றை இலக்கு தொகுதி பங்கீடு என்ற அடிப்படையில் தான் திமுக பேச்சுவார்த்தையில் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்