“தொடர்ந்து உழைக்க வேண்டும்;அப்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும்”: அண்ணாமலை…!
தொடர்ந்து உழைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக திமுக,அதிமுக கட்சிகள் முன்னதாக ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
அந்த வகையில்,பாஜக மாவட்ட தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.இதில்,அனைத்து மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மேலும்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும்,கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில்,இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் கைப்பற்ற வேண்டும் நாடாளுமன்ற தேர்தல்,வேல் யாத்திரை சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக ஓய்வின்றி கட்சி பணி செய்தது போன்று வரும் உள்ளாட்சி தேர்தலிலும்,அதே வேகத்தோடு உழைக்க வேண்டும்.அவ்வாறு தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்”,என்று தெரிவித்துள்ளார்.