10 நாளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் – மதுரை உயர்நீதிமன்றம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 10 நாளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இன்றைய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தில் தான் உலாவி வருகின்றனர். இது தான் அவர்களின் பொழுதுபோக்காகவும் மாறியுள்ளது. அந்த வகையில், இன்று பலரும் ஆன்லைனில் விளையாட்டுகளில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
முதலில் பொழுதுபோக்குக்காக தொடங்கப்படும் இந்த விளையாட்டானது, நாளடைவில் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர். இதற்காக தங்களது பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், மன உளைச்சலில் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம், வழக்கறிஞர் சூரிய பிரகாசம், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை ஊக்குவிக்கும் வண்ணம் விளம்பரங்களில் நடிக்கும் நடிகை தமன்னா, விராட் கோலி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முத்துக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு, வழக்கறிஞர் நீலமேகம் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ‘ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு 10 நாளில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றும், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு சட்ட வரையறை செய்துள்ளதா? கேள்வி எழுப்பியுள்ளது.