மத்திய அரசு மனசாட்சிப்படி, மனிதநேயப்படி நிவாரண நிதியை வழங்கும் என்று நம்புகிறோம்…!முதலமைச்சர் பழனிச்சாமி
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாகையில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட பின் முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளில் மருத்துவ குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.மத்திய அரசு மனசாட்சிப்படி, மனிதநேயப்படி நிவாரண நிதியை வழங்கும் என்று நம்புகிறோம் .புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்தது. ஆனால் எதிர்பாராத சேதம் ஏற்பட்டுள்ளது.கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பல்வேறு துறைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளது.7886 ஹெக்டேரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 415 முகாம்களில் 2 லட்சத்து 85 ஆயிரம்பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.