ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என சிடி ரவி கூறியது அமமுகவுக்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுப்பதாக கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை அதிமுக – பாஜக கூட்டணி நிறைவேற்றும். அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதற்காக தான் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுகத்தான் என்றும் ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக வாக்குகளை பிரிப்பாரா என்ற கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று சிடி ரவி குறிப்பிட்டுள்ளார். இதன்படி அதிமுக – பாஜக கூட்டணிக்கு அமமுகவிற்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுகிறதா என்று கேள்வியும் எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…