அவர்களிடம் இல்லாதது எங்களிடம் உள்ளது..! – கமலஹாசன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ,திமுக, அதிமுகவை அகற்றுவது தான் எங்களது பணி என்றும், அவர்களிடம் உள்ள பண பலம் நம்மிடம் கிடையாது என தைரியமாக ஒத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆனால், அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது என்றும், நாளைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், எங்களால் பயன்பெறுவார்கள் நீங்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.