திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக திமுகவுடன் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…