தொகுதி பங்கீடு குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் தோல்வியை தழுவ வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியான சிந்தனைகளை கொண்டுள்ளது என கூறியுள்ளார். பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை இருப்பதாக நான் உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லா அரசியல் இயக்கங்களிலும் பாஜக உள்ளே நுழைந்து பல தவறுகளுக்கு அடிப்படையாக அமைக்கிறார்கள். அந்த சர்வாதிகாரம் மனப்போக்கு பாஜகவிடம் இருக்கிறது. எனவே, அதைப்போன்ற தவறான சக்திகளை வேரறுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். அதை நோக்கித் தான் இந்த தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரண்டாம் கட்ட முடிவில் இருக்கிறது. நாங்கள் எத்தனை இடங்கள் கேட்டிருக்கிறோம், அவர்கள் எத்தனை இடங்கள் கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எல்லாம் அனுமானமான செய்தி, இன்றைக்கு அவைகள் முக்கியமல்ல, எங்கள் கூட்டணி எப்படி இணைந்து செயல்பட இருக்கிறது என்பது தான் முக்கியம். திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பந்து அவர்களிடம் தான் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து திமுகதான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவிலை என கூறியுள்ளார். வன்னியர் உள் ஒதிக்கீடு என்பது விவாதிக்க கூடிய விஷயம் என்றும் எல்லாருக்கும் உரிய ஒதுக்கீடு தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…