“இவர்களின் விவரங்களை தர வேண்டும்” – தனியார் மருத்துவமனைகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று 596 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால்,கொரோனா தொற்று அதிகரித்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை தனியார் மருத்துவமனைகள்,சிகிச்சை மையங்கள் & பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும்,சென்னையில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் & பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் #கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.
–@GSBediIAS, ஆணையாளர் pic.twitter.com/9zhSS2H8Il— Greater Chennai Corporation (@chennaicorp) June 19, 2022