பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளதால் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகள் விலையைஉயர்த்தி வருகின்றன.
தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 பாயைத் தாண்டியுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைப்பதாக கூறியதை நிறைவேற்ற வேண்டும் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்து கொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் உணர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ‘பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம்’ என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…