தமிழகத்தில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு.
ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்ஐ தாண்டி வெயில் கொளுத்தியது.
இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதில், வேலூர்- 108.4, மீனம்பாக்கம்- 106.1 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தி- 104.3 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம்- 103.6 டிகிரி ஃபாரன்ஹீட், நுங்கம்பாக்கம்- 103.2 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை விமான நிலையம்- 102.9 டிகிரி ஃபாரன்ஹீட், கடலூர்- 102.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
மேலும் புதுச்சேரி, நாகையில்- 102.2 டிகிரி ஃபாரன்ஹீட், தர்மபுரியில் 101.4 டிகிரி ஃபாரன்ஹீட், பரங்கிபேட்டை- 101.3 டிகிரி ஃபாரன்ஹீட், நாமக்கல்- 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.