தேர்தலில் கூறியபடி தான் 370-வது சட்டப்பிரிவை நீக்கினோம்-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உபயோகமாக இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு 100 நாட்கள் நிறைவு செய்துள்ளதை அடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உபயோகமாக இல்லை என்று கூறினார். ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம் குறித்து கூறப்பட்டது. தேர்தலில் கூறியபடி தான் 370-வது சட்டப்பிரிவை நீக்கினோம் என்று தெரிவித்துள்ளார்.