விருந்தோம்பலை நன்றாக உணர்ந்துள்ளோம்- சீன அதிபர் ஷி ஜின்பிங்
தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நன்றாக உணர்ந்துள்ளோம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கோவளம் தனியார் விடுதியில் இரு தலைவர்கள் முன்னிலையில் இந்திய – சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசினார்.அவர் பேசுகையில், இன்றைய பேச்சுவார்த்தை வருங்காலத்தின் மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம்.வரவேற்பால் மனம் மகிழ்ந்தேன், விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது.தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், எனது நண்பர்களும் நன்றாக உணர்ந்துள்ளோம்.மறக்க முடியாத ஒரு அனுபவம் எனக்கும் எங்கள் குழுவுக்கும் கிடைத்துள்ளது என்று பேசினார்.