மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என முதல்வர் ட்வீட்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ்(75) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்த நிலையில், சரத் யாதவ் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற இலட்சியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்