சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் . 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் .ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ராசா, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.இதன் பின் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்தோம்.மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து பேசவில்லை. சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…