கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீடு தொடர்பான குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்.பி திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு 3 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் உடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
மத்திய அரசை கண்டித்து அதிமுக போராட்டம்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் எம்.பி. சுப்பராயன், துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பேட்டியளித்தனர். ” திமுகவுடன் பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்றது. முதலமைச்சர் தமிழகம் திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை கொடுத்துள்ளோம், நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.