நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம்.! மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.!

Published by
மணிகண்டன்

எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நங்கள் அறிவித்துவிட்டோம்.  அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் களமிறங்க உள்ளார்.

இடைத்தேர்தல் பிரச்சாரம் : வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே காங்கிரஸ், திமுக கட்சியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்தும், அங்குள்ள தேர்தல் களம் குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

மு.க .ஸ்டாலின் உத்தரவு : அவர் கூறுகையில், தமிழக  முதலமைச்சரும், எங்கள் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பெயரில் நாங்கள் இடைதேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது அரசின் கடந்த ஒன்றரை வருட திட்டங்களை மக்களிடம் கூறியும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னென்ன அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டுமோ அதனை செய்ய உறுதி கூறி, வாக்கு சேகரிப்போம். என குறிப்பிட்டு பேசினார்.

தோழமை மாண்பு : மேலும் அவர் கூறுகையில், எங்கள் தோழமை கட்சியின் மாண்பை நாங்கள் காப்பாற்றுவோம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நாங்கள் அறிவித்துவிட்டோம்.  அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

37 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

42 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

52 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

3 hours ago