நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு..!
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது மாநில தேர்தல் ஆணையம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 9 மாவட்டங்களுக்கான 92 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது மாநில தேர்தல் ஆணையம் செய்யப்பட்டுள்ளது.