மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம் – டிடிவி தினகரன்
மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம் என டிடிவி தினகரன் ட்வீட்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், | உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில், புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய அரசின் டெண்டர் அறிவிப்பு கண்டனத்திற்குறியது.
மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம், விவசாயம்தான் வேண்டும் என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு. இந்த டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். (5/5)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 4, 2023