வெள்ளத்திலிருந்து நாங்கள் படம் கற்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் காமராஜ்!

Default Image

2015 இல் வெள்ளம் வந்த பிறகு தான் 2016 இல் மக்களால் அதிமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது, எனவே வெள்ளத்திலிருந்து நாங்கள் படம் கற்க வேண்டிய அவசியமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். 

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிவர் புயல் உருவாக்கி தமிழகத்தையே நிலை குலைய செய்துள்ளது. இந்த புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், வெல்ல நிவாரண பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில், 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதிலிருந்து அதிமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லையா என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட பின் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அம்மாவின் ஆட்சி தான் வந்தது எனவும், எனவே வெள்ளத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள தேவையில்லை, ஸ்டாலின் தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்பொழுது வெள்ளம் வந்திருந்தாலும் மூன்றாவது முறையாகவும் மக்களால் அதிமுக தான் ஆட்சியில் அமர்த்தப்படப்போகிறது எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்