திமுக எம்.பி.க்கள் மாதிரி எங்களுக்கு நடிக்க தெரியாது-முதலமைச்சர் பழனிசாமி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பானமையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.இதனிடையே நேற்று மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றார்கள்.அதேபோல் இன்றும் பதவி ஏற்றனர்.குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இன்று பதவி ஏற்றனர்.பதவி ஏற்ற அனைவரும் தமிழிலே பதவி ஏற்றனர்.இதனால் மக்களவையில் தமிழின் குரல் ஓங்கி ஒலித்தது.
இந்நிலையில் திமுக எம்பிக்கள் பதவி ஏற்றது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என்று தெரிவித்துள்ளார்.