பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச்.06) சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவின் மேடையில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் நேற்றும் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று.ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது.
இந்நிலையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் துரைமுருகன் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.
இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர்.எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன்.அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது.
தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலனை செய்யப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…