திண்டுக்கல் காவல்துறையின் மாற்றாந்தாய் மனப்போக்கை கண்டிக்கிறோம் – மநீம
மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுத்த திண்டுக்கல் காவல்துறையைக் கண்டித்து மநீம ட்விட்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ‘மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுக்கும் திண்டுக்கல் காவல்துறையைக் கண்டிக்கிறோம். திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது.
தற்போது அந்தப் பணி முடிந்து, இன்று மநீம மாநிலச் செயலாளர் அவர்களின் தலைமையில் அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுக்கின்றனர். அருகிலேயே பிற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கும்போது,
மய்யத்தின் கொடியை மட்டும் ஏற்றவிடாமல் தடுப்பது ஏன்? மய்யத்தின் கொடியை ஏற்றாமல் நகரமாட்டோம் என்று திண்டுக்கல் மாவட்ட மய்ய நிர்வாகிகள் காவல்துறையிடம் தெளிவுபடச் சொல்லிவிட்டனர்.
ஆளுங்கட்சி,பிஜேபிக்கு அனுமதி பிற கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என்ற திண்டுக்கல் காவல்துறையின் மாற்றாந்தாய் மனப்போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது!’ என பதிவிட்டுள்ளார்.
ஆளுங்கட்சி,பிஜேபிக்கு அனுமதி பிற கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என்ற திண்டுக்கல் காவல்துறையின் மாற்றாந்தாய் மனப்போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது!@tnpoliceoffl @Dindiguldistri1 @collrdgl @CMOTamilnadu @mkstalin #MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 7, 2022