அண்ணா வழியில் நாங்கள் வந்தவர்கள். எனவே ‘தமிழ்நாடு’ என்பதை ஆதரிக்கிறோம் – ஜெயக்குமார்
அண்ணா வழியில் நாங்கள் வந்தவர்கள். எனவே ‘தமிழ்நாடு’ என்பதை ஆதரிக்கிறோம் என ஜெயக்குமார் பேட்டி.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி ஒரு நிகழ்வில் தெரிவித்திருந்தார். இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணா வழியில் நாங்கள் வந்தவர்கள். எனவே ‘தமிழ்நாடு’ என்பதை ஆதரிக்கிறோம். தமிழ்நாடு என்ற பெயர் தான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.