ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என அம்மாவட்ட மக்கள், 2018-ம் ஆண்டு மே-22ம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் 100-வது நாள் போராட்டம் தான் மே-22-ம் தேதி நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம் ஆகும்.
இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், இதில் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று தூத்துக்குடி முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
எத்தனை வருடங்கள் கடந்தாலும், தூத்துக்குடி மக்களின் மனதை விட்டு நீங்காத, அழியாத வடுவாய் இந்த சம்பவம் பாதித்துள்ளது. இந்த 15 பேரின் தியாகமும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…