ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.!

Default Image

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை  அகற்ற வேண்டும் என அம்மாவட்ட மக்கள், 2018-ம் ஆண்டு மே-22ம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் 100-வது நாள் போராட்டம் தான் மே-22-ம் தேதி நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம் ஆகும். 

இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், இதில் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஆகும். 

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று தூத்துக்குடி முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

எத்தனை வருடங்கள் கடந்தாலும், தூத்துக்குடி மக்களின் மனதை விட்டு நீங்காத, அழியாத வடுவாய் இந்த சம்பவம் பாதித்துள்ளது. இந்த 15 பேரின் தியாகமும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்