இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம் பேட்டி.
பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன் என தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட்டேன் பழனிசாமி தான் கையெழுத்திடவில்லை. அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியினரும் எங்களுடனும் பேசி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம். மேலும் இணைந்து செயல்படுவதற்கு பழனிசாமி அணியுடன் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பொறுப்பு பேரவை விதிகளில் இல்லை என சபாநாயகர் கூறிவிட்டார்.
அப்படி இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்க நான் எப்போதும் காரணமாக இருக்க மாட்டேன். அதிமுக விதிகளின்படி கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தர்மயுத்தம் என தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…