அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் – ஜெயக்குமார்

jeyakumar

அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், ஒருவரை ஒருவர் விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், அதிமுகவுக்கு வசீகரமும், சரியான தலைமையும் தற்போது இல்லை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

Annamalai
[Image source : PTI]

இதற்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான அதிமுகவினர் சந்திப்பை பாஜக நிர்வாகிகள் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்