பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் நேரு
சென்னை கட்டுப்பாட்டு அறையில், மழை பாதிப்புகளை அமைச்சர் நேரு நேரடியாக கண்காணித்து வரும் நிலையில், மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் நேருவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாநகராட்சி சார்பாக 990 பம்புகள் மூலமாக தண்ணீர்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், சில இடங்களில் மோட்டார் மூழ்கி போவதால், அங்கெல்லாம் புது மோட்டார் பொருத்தப்படுகிறது.
மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதல்வர்..!
மழை நிற்கும் வரையில் எந்தெந்த இடங்களிலெல்லாம் பணிகள் மேற்கொள்ள முடியுமோ அந்த இடங்களில் பணிகளில் நடையபேரு வருகிறது. கிட்டத்தட்ட 3 லட்சம் மக்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க மக்கள் பெரும்பாலனவர்கள் மறுப்பு தெரிவிக்கும் நிலையில், ஒவ்வொரு வீடாக சென்று உணவு கொடுத்து வருகிறோம்.
அனைத்து அலுவலர்களும் அந்தந்த பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். சென்னை மாநகராட்சியில் 15,000 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை இல்லாத பகுதிகளில் உள்ள 5000 மாநகராட்சி பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.