தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை…! கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை…! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுவரை 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தற்போது தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசி வேண்டி முதல்வர் அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு தடுப்பூசி அனுப்பினால், 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழகத்தில் தடுப்பூசி முகாமை தடுப்பூசி திருவிழாவை போல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் சாரை, சாரையாக வந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை என தெரிவித்துள்ளார்.