இவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் – சு.வெங்கடேசன் எம்.பி
புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்
காரைக்குடியில் நேற்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஆளுநர் பேச்சு
அப்போது பேசிய அவர், இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வின் பரிமாண வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுகிறது என தெரிவித்திருந்தார்.
வெங்கடேசன் எம்.பி ட்வீட்
இது குறித்து வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே! ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது… புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான்.’ என பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே!
ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது…
புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான். pic.twitter.com/ECnwZwQiBk
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 22, 2023