நீட் விலக்கு.! எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா.? அமைச்சர் உதயநிதி கேள்வி.!
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வெளிப்டையாக கூறி வருகிறோம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம். இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உதயநிதி விமர்சனம் :
இது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து இருந்தார். அவரது விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கூறினார். நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் மசோதாவை இரண்டு முறை டெல்லிக்கு அனுப்பி அது திருப்பி அனுப்பட்டதை கூட மக்களுக்கு தெரியாமல் மறைத்த அரசு தான் அதிமுக அரசு என விமர்சித்தார்.
இபிஎஸ்-க்கு கேள்வி :
மேலும், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மீண்டும் டெல்லி நாங்கள் அனுப்ப போகிறோம். நீட் விலக்கு குறித்து ஆளுநர் மாளிகை முன்போ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தினால் அதில் எடப்பாடி பழனிசாமி வந்து கலந்துகொள்வாரா? அதற்க்கு தைரியம் இருக்கிறதா.? என கேள்வி எழுப்பினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.