அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதுரை வலையங்குளத்தில் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், அதிமுகவின் கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ” பொதுவாகவே நான் சிறிய மேடை 1 மைக் இருந்தாலே அரைமணி நேரம் பேசுவேன். ஆனால், இன்று கடல் மாதிரி கூட்டம் எவ்வளவு பெரிய மேடை இந்த பிரமாண்ட மேடையில் என்னை சுருக்கி பேச சொல்றாங்க.
எனக்கு எப்போதும் சுருக்கி பேசி பழக்கம் இல்லை திமுக-வை கருக்கி பேசித்தான் பழக்கம். எனவே எனக்கு சுருக்கி பேசியெல்லாம் வராது. முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன். குள்ளநரி கூட்டத்திற்கு நடுவே, ஆட்சி செய்தவர் எடப்பாடியார். துரோகிகளுக்கு மத்தியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இன்று எடப்பாடியார் இருக்க அவர் செய்த மக்கள் பணி தான் காரணம்.
கருணாநிதி, ஸ்டாலினை, ஸ்டாலின் உதயநிதியை தேர்வு செய்தது போல அல்லாமல், நம் தலைவர்கள் தொண்டர்களால் தேர்வானார்கள். நம் தலைவர்கள் ஒன்னும் விடியல் தருவதாக சொல்லி மக்கள் பணத்தை பறிக்க சட்டம் போட்டவர்கள் அல்ல . குழந்தைகளுக்கு சத்துணவு போட்டவர்கள்.
மக்களுக்காக மக்கள் திலகம் ஆரம்பித்த கட்சி தான் நம்மளுடைய அதிமுக கட்சி .மக்களால் நான் மக்களுக்காகவே நான் கூறியவர் அம்மா. அப்பன்களால் நம் தலைவர்கள் உருவாகவில்லை. கோடானகோடி தொண்டர்களால் உருவானவர்கள்.தமிழகத்தை ஆட்சி செய்ததிலேயே அதிகமுறை ஆண்ட கட்சி அதிமுக தான்.
எங்களுடைய இந்த பெரிய எழுச்சியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், எங்கள் சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும், நாங்கள் இருக்கிறோம். கண்டிப்பாக நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லாட்சி தருவோம் என மக்களுக்கு தெரியபடுத்துவதற்கு தான் இந்த பிரமாண்ட மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்” என விந்தியா கூறியுள்ளார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…