பேரறிவாளன் தியாகி என்று நாங்கள் கூறவில்லை – அமைச்சர் ரகுபதி
திமுக ஒரு மனிதாபிமான அடிப்படையிலே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது என அமைச்சர் ரகுபதி பேச்சு.
புதுக்கோட்டையில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் தியாகி என நாங்கள் கூறவில்லை. திமுக ஒரு மனிதாபிமான அடிப்படையிலே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
அவரின் தாயாரின் போராட்டத்தின் பலனாக மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்தி திமுக – காங்கிரஸ் கட்சியை சிலர் பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என தெரிவித்துள்ளார்.