த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மறுப்பா.? விளக்கம் கொடுத்த விழுப்புரம் எஸ்.பி.!
அக்டோபர் 27இல் நடைபெறும் த.வெ.க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு என்கிற செய்தி தவறானது என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக செப்டம்பர் மாதம் மாநாடு என செய்திகள் வெளியான நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தாமதமாவே, இறுதியாக அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் இருந்து த.வெ.க கட்சியினர் வருவதற்கு ஆயத்தமாகி வரும் சூழலில், மாநாட்டிற்கு இன்னும் கவல்த்துறை அனுமதி தரவில்லை என்ற செய்திகள் வெளியாகின.
த.வெ.க மாநாடு குறித்த 21 கேள்விகளை காவல்துறை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படியான சூழலில் தற்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி தீபக் இதுகுறித்து பேசியுள்ளார். அதாவது, “த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று செய்தியில் உண்மையில்லை. மாநாடு நடத்துவதில் உள்ள பாதுகாப்பு நிபந்தனைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். ” என கூறியுள்ளார்.
மேலும், த.வெ.க மாநாட்டில் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு விழுப்புரம் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.