மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளது என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில், தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகளின் நினைவுகளை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்ப்பட்ட மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகளே உங்கள் தியாகம் தான் இன்றும் எங்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தி திணிப்பு அதிகரித்த போது எல்லாம் போராடி ஏராளமானோர் சிறைவாசம் அனுபவித்தனர். எனவே, தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல, இந்தி உள்பட எந்த மொழிக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜிக்கே இந்தித்திணிப்பு எதிர்ப்பில் தமிழர்களைப் பற்றி புரிந்துகொள்ள 25 ஆண்டுகள் ஆனது, என்றால் இன்றைய பாஜகவினருக்கு எதனை நூற்றாண்டு ஆகும் என்று தெரியவில்லை.
எந்த நோக்கத்திற்காக தி.மு.க தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து தி.மு.க எப்போதும் பின் வாங்காது. இதுதான் தமிழின் ஆட்சி! இதுதான் தமிழினத்தின் ஆட்சி! இதுதான் பெரியாரும், பாரதிதாசனும் அண்ணாவும், கலைஞரும் விரும்பிய ஆட்சி. கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி-யை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? இவர்கள் சொல்லும் சிப்பாய் கலகத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே 1806ல் வேலூர் புரட்சி நடந்திருக்கிறது.
இந்த வீரர்களை பற்றித் தெரியாத இவர்களா, தமிழின், தமிழர்களின் உணர்வை புரிந்துகொள்ளப் போகிறார்கள். கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…