கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது- அமைச்சர் ஜெயக்குமார்..!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிசைப்பெற்று வந்த சசிகலா மருத்துவர்களின் பரிந்துரை பெயரில் தற்போது பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில், சசிகலா நாளை சென்னை வர உள்ளார்.
இதைத்தொடர்ந்து, சசிகலா தமிழகம் வருகை குறித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மிகப்பெரிய இயக்கம் இது; கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது என பதிலளித்துள்ளார். சசிக்கலாவை கண்டு அதிமுகவிற்கு பயம் இல்லை.
அவரது சொத்துகளை ஏமாற்றிய டிடிவி தினகரன் தான் பயப்பட வேண்டும். டிடிவியிடம் சசிகலா கணக்கு கேட்பார் என்பதால் தினகரன் தான் பதற்றம் உள்ளது என தெரிவித்தார். நாளை சசிக்கலா வருகையையொட்டி அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் ஆகியவற்றில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.