நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுர்ஜித் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு தவறி விழுந்தான். அப்போது முதல் சிறுவனை மீட்கும் பணி 64 மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
பல முயற்சிகள் செய்தும் தோல்வியில் முடிந்த நிலையில் அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போன்ற குழி தோன்றும் பணியை ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஓஎன்ஜிசியின் ரக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் குழி தோண்டும் போது பாறைகள் குறுக்கிடுவதால் தோண்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. குழி தோண்டும் பணியை விஜயபாஸ்கர் தொடக்கத்தில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் இரண்டாவது ரக் இயந்திரம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இயந்திரங்களாலும் குறித்த படி பள்ளம் தோண்ட முடியவில்லை. மணப்பாறையில் பாறைகள் கடினமாக உள்ளது. இவ்வளவு கடினமான பாறைகள் இதுவரை நான் பார்த்ததில்லை குழந்தையின் மேல் ஒரு அங்குலத்திற்கு மண் விழுந்துள்ளது. இதனால் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். இதுகுறித்து துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.
இது வரை இரண்டு ரக் இயந்திரம் மூலம் 40 அடி மட்டுமே குழி தோண்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…