#ELECTIONBREAKING : ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்- தினகரன்..!
அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வரும். ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியான பிறகு அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை நாங்கள் அறிவிப்போம். மக்கள் ஏமாற்றும் அறிவிப்புகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நாடு எவ்வளவு கடனில் தள்ளாடுகிறது என்பது தெரியும் என கூறினார்.