1,00,000 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளோம்- அண்ணாமலை …!
பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக சட்டமன்றத்தில் தற்போது பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம். வரும் 10, 11, 12ம் தேதி பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பாஜக வெல்லும். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கான இடம் உருவாகிவிட்டது. தமிழகத்தில் பாஜகவா..?திமுகவா..? என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.