நட்பு ரீதியில் உள்ளோம்.. த.மா.கா. யாருடனும் தற்போது கூட்டணியில் இல்லை..ஜி.கே.வாசன்!

gk vasan

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்ல என்று அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி நிலவரம், தொகுதி ஒதுக்கீடு என ஆலோசனைகள் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, தற்போது தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், கூட்டணி பிளவு என்பது நாடகம் என்றும் தேர்தல் நேரத்தில் மீண்டும் கூட்டணி அமைய வாய்ப்பு உளது எனவும் மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த கூட்டணி பிளவால், திமுக – காங்கிரஸ், அதிமுக, பாஜக, அமமுக – ஓபிஎஸ் என தமிழக அரசியல் களத்தில் கூட்டணி எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கம்.! காரணம் என்ன.?

எனினும், இம்முறை அதிமுக புதிய கூட்டணி அமைத்து தேர்த களம் காணும் என்றும், இதுபோன்று பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது யாருடனும் கூட்டணியில் இல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். முன்பு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தல் சந்தித்திருந்த த.மா.கா. தற்போது யாருடனும் கூட்டணி இல்லை என கூறியுள்ளது.

அதாவது, திண்டுக்கல்லில் த.மா.கா. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, வரும் தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்கு முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால், மறுபக்கம் இந்தியா கூட்டணி என்பது ஒரு முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது.இந்தியா கூட்டணியில் இருக்கும் ட்சிகளுக்கிடையே பல மாநிலங்களில் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்திய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. எனவே, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் த.மா.கா. நட்பு கட்சியாக செயல்பட்டு வருகிறோம். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா. முக்கிய சக்தியாக இருக்கும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்