மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும் என ராமதாஸ் ட்வீட்.
இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில், தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்மொழியாம் தமிழை அழிக்கும் நோக்குடன் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து பல கட்டங்களில் போராடி உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும்!
அன்னை மொழியைக் காக்கும் போராட்டத்தில் சிறைபட்டு,வாட்டி வதைத்த நோய்க்கு மருத்துவம் பெறாமலும், தங்கள் உடலை தாங்களே ’தீ’க்கு பலி கொடுத்தும் மொழிப்போர் வீரர்கள் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றவை. அவற்றை எந்த நாளிலும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!
இந்தியையும்,சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றுக்கு எதிரான நமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அன்னை தமிழை காக்க எந்த தியாகத்தையும் செய்ய நாம் உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…