சென்னை:நொடியும் துஞ்சாது அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசுத்துறை ஊழியர்களும் அவர்களோடு நானும் இந்நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம்,விழிப்புடன் அரண் அமைத்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில், அமைச்சர்கள்,தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன்படி,அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்க வைப்பது மற்றும் வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்தார்.
இதனையடுத்து,மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்.மேலும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், பயிர்ச்சேத விவரங்களை பார்வையிட்டு, அறிக்கை அளிக்க அமைச்சர் குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில்,மழை நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம் என்றும் விழிப்புடன் அரண் அமைத்து வருகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் அவற்றைக் காக்கவும்; நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்திடவும்; சேதம் குறித்து அறிக்கை அளித்திடவும் மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் தலைமையில் ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நொடியும் துஞ்சாது அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசுத்துறை ஊழியர்களும் அவர்களோடு நானும் இந்நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம்;விழிப்புடன் அரண் அமைத்து வருகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சிந்தாரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வர் 5 வது நாளாக பார்வையிட்டு வருகிறார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…