நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் – அமைச்சர் உதயகுமார்
வடக்கிழக்கு பருவமழை காலங்களில் நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வடக்கிழக்கு பருவமழை காலங்களில் நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.நிவாரண மையம் அமைப்பது, மக்களை பாதுகாப்பது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படுள்ள பேரிடர்களை அனுபவமாக எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட பகுதிகள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.