நாம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் – சு.வெங்கடேசன் எம்பி
நாம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், தமிழக அரசே, விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு என்று சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்.
தமிழகம் மட்டுமல்லாம் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மோசமான கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் பாதிப்பு ஒரு நாளை 3 லட்சத்தை கடந்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு அதிகரிப்பதால், ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி போன்ற மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலி காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும் நிர்வாகம் சரியில்லை என ஒரு தரப்பில் விமர்சனம் செய்து வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசே,விரைந்து நடவடிக்கைகளில் இறங்குங்கள் என்று சு.வெங்கடேசன் எம்பி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன்.
ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயண்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நமது பயன்பாடு 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. நாம் அபாய கட்டத்தை நெருங்கி கொண்டியிருக்கிறோம். தமிழக அரசே,விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன்.
ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயண்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக நமது பயன்பாடு 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசே,விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு. pic.twitter.com/QpgMJIaLIu
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 28, 2021