சற்று நேரத்திற்கு முன் மருத்துவமனையில் உள்ள பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனை பார்த்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா , துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ சில சூழ்நிலைகளிலோ பேச வார்த்தை வராது, எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம் இன்னும் சில நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.
மேலும், எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம். ஆனால், அது நடக்கவில்லை. நம் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லோருடைய முடிவும் அதன் கையில் தான் இருக்கிறது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியன் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது எஸ்.பி.பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனையில் அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…