தண்ணீரின்றி தவிக்கும் தமிழகம்…நீரை சேமிக்கும் வழிகள் இதோ!!
தண்ணீர் இது உலகில் மிகவும் எளிதாக கிடைக்க கூடியது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இது மிகவும் அரிதாக உள்ளது. அந்த காலத்தில் தண்ணீர், நம்மை தேடி வரும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், தண்ணீரை தேடி நாம் செல்கின்றோம்.
இதற்கான முக்கிய காரணம், காடுகளை அளித்தால் மற்றும் இயற்கை வளங்களை சூறையாடுதல். இந்நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க, மக்களான நாம் மேற்கொள்ள வேண்டுவது குறித்து நாம் காண்போம்.
- கழிவு நீரை ஒருபொழுதும் சாக்கடையில் விடாதீர்கள். சாக்கடையில் விடும் நீரை செடிகளுக்கு விடலாம்.
- நீர் கசிவை தடுக்க முயலுங்கள். ஏனேனில், நாம் வினாடிக்கு ஒரு சொட்டு என்ற வேகத்தில் நீர் கசிவதால் ஒரு வருடத்திற்கு 10,200 லிட்டர் நீர் வீணாகும். அதுமட்டுமின்றி, நீருக்கான தொகை அதிகமாக செலவாகும்.
- குளிப்பதற்கு குறைந்த அளவு நீரை உபயோகியுங்கள். சவர் மற்றும் பாத்டப்பை உபயோகிப்பதை குறையுங்கள். அதில் மட்டும் 100 லிட்டர் நீர் வீணாகிறது.
- முகம் கழுவும்போது, வாஷ் பேசினில் தண்ணிரை ஓட விடாதீர்கள். அதன் மூலமும் நீர் வீணாகிறது.
- வாஷிங் மெசினில் நீரை அளவுடன் பயன்படுத்துங்கள். அதில் மட்டும் 10 லிட்டர் நீரை சேமிக்கலாம்.
- வெஸ்டர்ன் ஸ்டைல் கழிப்பறைகளை உபயோகிப்பதை குறைத்து விடுங்கள். அதன் மூலம் மூன்று லிட்டர் தண்ணிரை சேமிக்கலாம்.
- மழை நீர் சேகரிப்பை வீட்டுக்கு வீடு அமைத்தல்.
- நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்து ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றால் நாம் நீரை சேமிக்கலாம்.